Wednesday, 1 February 2012

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் விராத் கோஹ்லி?


ஏற்கும் நிலையில் நான் விலகிக்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என டோனி அறிவித்தார்.

கோஹ்லியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என பிசிசிஐ உறுப்பினர்கள் பலர் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், கேப்டனை நியமிக்கும் பணி தேர்வுக்குழுவினர் கையில்தான் உள்ளது. கேப்டனுக்காக பரிந்துரை பட்டியலை பிசிசிஐ செயற்குழு அளிக்கும். டோனிக்கு கேப்டன் பதவியை நீட்டிப்பதும், புதிய வீரரை கேப்டனாக கொண்டு வருவதும் தேர்வுக்குழுதான் முடிவு செய்யும்.

விராத் கோஹ்லி இளம் வீரர் என்று கூறுகிறார்கள். ஆனால் டோனி கேப்டன் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட போது அவரும் இளம் வீரராகத்தான் இருந்தார் என்றார். இந்த சூழ்நிலையில் வரும் 13ம் தேதி சென்னையில் பிசிசிஐ செயற்குழு கூடுகிறது. இதில் இந்திய அணியின் தொடர் தோல்விகள் குறித்தும், புதிய கேப்டனா அல்லது டோனியை நீடிக்க செய்வதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

0 comments:

Post a Comment